மே தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று கிராம சபை கூட்டம்..!


மே தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று கிராம சபை கூட்டம்..!
x

மே தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தொழிலாளர் தினமான மே 1-ந் தேதி (இன்று) காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி ஊரகக்குடியிருப்புத்திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான் முதல்வன் திட்டம் மற்றும் இதரப் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story