காணும் பொங்கலையொட்டிபவானிசாகர் அணை பூங்கா- கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


காணும் பொங்கலையொட்டிபவானிசாகர் அணை பூங்கா- கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

காணும் பொங்கலை முன்னிட்டு பவானிசாகர் அணை பூங்கா மற்றும் கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஈரோடு

காணும் பொங்கலை முன்னிட்டு பவானிசாகர் அணை பூங்கா மற்றும் கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் முன் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சறுக்கு, சிறுவர் ரெயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்களும், ஓய்வெடுப்பதற்காக அழகிய புல் தரைகளும் உள்ளன. தினமும் சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்வர்.

இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி நேற்று ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 30,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கார், இருசக்கர வாகனம் மற்றும் பஸ்களில் பவானிசாகர் அணை பூங்காவுக்கு குடும்பத்துடன் வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு, கொலம்பஸ் பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள புல் தரைகளில் அமர்ந்து உணவு உண்டும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசியும் பொழுதை போக்கினர்.

கொடிவேரி

இதேபோல் காணும் ெபாங்கலான நேற்று கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் அணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதையடுத்து அணை பகுதியில் சூடாக விற்பனை செய்யப்பட்ட மீன் வறுவல்களை வாங்கி ருசித்து சாப்பிட்டனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து உண்டனர். அதுமட்டுமின்றி அங்குள்ள அணை பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story