சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி 250 சிறப்பு பஸ்கள்
கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, மதுரை, கோவை, திருப்பூருக்கு சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, மதுரை, கோவை, திருப்பூருக்கு சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கும்பகோணம் கோட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகம் சார்பில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறையையொட்டி பொது மக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி. புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதே போல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 150 பஸ்கள் இயக்கப்படுகிறது.
250 சிறப்பு பஸ்கள்
திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 பஸ்கள் என கூடுதலாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல நாளை மறுதினம் மற்றும் 17-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.