வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டிபக்தர்களை மகிழ்விக்க தயாராகும் பொழுதுபோக்கு வளாகம்


வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டிபக்தர்களை மகிழ்விக்க தயாராகும் பொழுதுபோக்கு வளாகம்
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் ராட்டினங்கள் அடங்கிய பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

தேனி

கவுமாரியம்மன் கோவில்

தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 19-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம், ஆயிரம் கண்பானை ஆகிய நேர்த்திக்கடன்களையும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவிழா ெதாடங்கி 8 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் அக்னி சட்டி காவடி, கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். விழாவில் அம்மனுக்கு அடுத்தப்படியாக வீரபாண்டியில் அமைக்கப்படும் ராட்டினங்கள் சர்க்கஸ், மாயாஜாலம் உள்பட பல்வேறு விளையாட்டு அம்சங்கள் அடங்கிய பொழுதுபோக்கு வளாகமே என்றால் அது மிகையாகாது.

பொழுதுபோக்கு அம்சம்

சித்திரைத் திருவிழா கண்காட்சியை காண தேனி, மதுரை, திண்டுக்கல் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் பகலை விட இரவு நேரத்தில் பக்தர்களின் வருகை அதிக அளவில் இருக்கும். இதனால் பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வளாகத்திற்குள் டிராகன் ராட்டினம், சைடு ரோலிங், பூம்பூம், சிறிய ரக ஜாய்ன்டுவீல், பேய் குகை, சர்க்கஸ், மாயாஜாலம், நாக கன்னி, நாய் குறி சொல்லுதல் போன்ற சிறுவர்கள் மட்டுமின்றி அனைவரையும் மகிழ்விக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story