உலக சர்க்கரை தினத்தையொட்டி மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி - கிராமமக்களுக்கு பரிசோதனை செய்தனர்


உலக சர்க்கரை தினத்தையொட்டி மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி - கிராமமக்களுக்கு பரிசோதனை செய்தனர்
x

திருப்பரங்குன்றம் அருகே மதுரை எய்ம்ஸ் மாணவர்களின் உலக சர்க்கரை தினத்தையொட்டி கிராம மக்களிடையே விழிப்புணர்வு நடந்தது. மேலும் பரிசோதனை செய்தனர்

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் அருகே மதுரை எய்ம்ஸ் மாணவர்களின் உலக சர்க்கரை தினத்தையொட்டி கிராம மக்களிடையே விழிப்புணர்வு நடந்தது. மேலும் பரிசோதனை செய்தனர்

எய்ம்ஸ் மாணவர்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1977.80 கோடியில் உலக தரம்வாய்ந்த உயர்தர சிகிச்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்த நிலையில் தற்போது தற்காலிகமாக ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு அதில் 50 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்

விழிப்புணர்வு பேரணி

இந்தநிலையில்திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் உலக சர்க்கரைதினத்தையொட்டி மதுரைஅகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி, மற்றும் இலவச சர்க் கரை பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி முதன்மை இயக்குனர் அனுமந்ராவ் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் 50 பேர் பல்வேறு வாசகங்கள் கொண்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலம் வந்தனர்.

இலவச பரிசோதனை

தோப்பூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். அவர்களை ஊராட்சி சார்பில் தலைவர் சேகர், துணைத்தலைவர் சந்திரா மற்றும் வார்டு உறுப்பினர்கள் வரவேற்றனர். ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் கிராம மக்களுக்கு மருத்துவ குழுவினர் சர்க்கரை பரிசோதனை ரத்த அழுத்தம் பரிசோதனைசெய்தனர். நிகழ்ச்சியில் இணை இயக்குனர் லெப்டினட் கர்னல் பரம்வீர்சிங்ஜம்வால், நிர்வாக அதிகாரி சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story