கம்பத்தில், சாலையில் சுற்றித்திரிந்தஆதரவற்ற 2 பெண்கள் மீட்பு


கம்பத்தில், சாலையில் சுற்றித்திரிந்தஆதரவற்ற 2 பெண்கள் மீட்பு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில், சாலையில் சுற்றித்திரிந்த ஆதவரற்ற 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

தேனி

கம்பம் புதிய பஸ்நிலையம், வ.உ.சி. திடல், காந்திசிலை, பார்க்ரோடு, அரசு மருத்துவமனை, வாரச்சந்தை, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் ஆதரவற்றோர் ஏராளமானோர் சுற்றித்திரிகின்றனர். இவர்களில் சிலர் கையில் கம்பு, கற்கள் போன்றவற்றை வைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தனர். மேலும் ஓட்டல், டீக்கடை, தெருவோர கடைகளில் வரும் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோர்களை அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த போலீசார், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மீட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை, உணவுகள் வழங்கி வருகின்றனர். அதன்படி, கம்பத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் நேற்று கம்பம் வடக்கு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் போலீசார் மற்றும் பெரியகுளம் அரசு மனநல காப்பக மனநல ஆலோசகர் குழுவினர் கம்பம் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுற்றி திரிந்த 2 பெண்களை மீட்டனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி பெரியகுளம் அரசு மன நல காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.


Related Tags :
Next Story