கம்பத்தில்சண்டை கிடாக்களுக்கு கத்தி குத்து


கம்பத்தில்சண்டை கிடாக்களுக்கு கத்தி குத்து
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் சண்டை கிடாக்களை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 39). இவர், 2 சண்டை கிடாவை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அப்பகுதியில் உள்ள அரசமரம் அருகே உள்ள தனது ஆட்டு கொட்டகையில் சண்டை கிடாக்களை அடைத்து வைத்திருந்தார். நேற்று காலை சண்டை கிடாக்களுக்கு தீவனம் வைப்பதற்காக கொட்டகைக்கு அவர் சென்றார்.

அப்போது ஒரு சண்டை கிடா கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்தது. மற்றொன்று கிடாயின் கழுத்தில் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதைக்கண்ட லட்சுமணன் கிடாவை மீட்டு கம்பம் அரசு கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். இதுகுறித்து அவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்டை கிடாவை கத்தியால் குத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story