கம்பத்தில் குளத்தின் கரையை சீரமைக்க கோரிக்கை
கம்பத்தில் வீரப்பநாயக்கன் குளத்தின் கரையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தேனி
கம்பத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் வீரப்பநாயக்கன்குளம், உடைப்படிகுளம், ஒட்டுக்குளம் ஆகியவை உள்ளது. இந்த குளங்களில் முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே வீரப்பநாயக்கன்குளத்தின் கரை வழியாக நிலங்களுக்கு விளைபொருட்களை டிராக்டர் மூலம் விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.
மேலும் கம்பத்தில் இருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்ல இந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குளத்தின் கரை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மழைகாலம் தொடங்கும் முன்பு கரையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story