கம்பத்தில்தூய்மை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர்கள் பேரவை சார்பில், கம்பம் வ.உ.சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர்கள் பேரவை சார்பில், கம்பம் வ.உ.சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர்கள் பேரவை மாநில தலைவர் பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கோர்ட்டு உத்தரவுப்படி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.616 சம்பளம் வழங்க வேண்டும், 6 மாதத்திற்கு ஒருமுறை தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவ முகாம் நடத்த வேண்டும். ஒப்பந்த பணிகளை ரத்து செய்துவிட்டு நகராட்சி நிர்வாகம் நேரடியாக பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர்கள் பேரவை நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.