கம்பத்தில்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு:கணவர் உள்பட 2 பேர் கைது


கம்பத்தில்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு:கணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

கம்பம் கெஞ்சயன்குளம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). கார் டிரைவர். இவரது மனைவி இந்துமதி (33). கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிந்து ஸ்ரீ என்ற மகளும், விஷாந்த் என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் பிரகாஷ், தனது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடன் தனது வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். பிரகாசுக்கும், இந்துமதிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது இந்துமதியை பிரகாஷ் மற்றும் ஈஸ்வரன் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்துமதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க போவதாக வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றார்.

அப்போது ஆத்திரமடைந்த பிரகாஷ் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து இந்துமதியின் வலது கையை வெட்டினார். இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியதில் வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசில் இந்துமதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா வழக்குப்பதிந்து பிரகாஷ், ஈஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.


Related Tags :
Next Story