கம்பத்தில்சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
கம்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேனி
கம்பம் பத்திர பதிவு அலுவலகம் வடக்கு பகுதியில் இருந்து அரசு மருத்துவமனை வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காலியிடங்கள் உள்ளன. இந்த இடத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வந்தனர். இதைத்தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதையடுத்து சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலியிடங்களில் மீண்டும் தனிநபர் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றி, பூங்கா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story