திருச்செந்தூரில் கோவில் கடற்கரையில் பழமையான நந்தி சிலை


திருச்செந்தூரில் கோவில் கடற்கரையில்   பழமையான நந்தி சிலை
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் கோவில் கடற்கரையில் பழமையான நந்தி சிலை கிடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் கோவில் கடற்கரையில் பழமையான சேதமடைந்த நந்தி சிலை கிடந்தது.

இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடப்பது வழக்கமாக உள்ளது. இந்த கும்பாபிஷேக நடத்துவதற்கு முன்பு அந்த கோவில்களில் பழமையான சேதமடைந்த சுவாமி சிலைகளை சரிசெய்வதும், அதற்கு பதிலாக புதிய சிலைகள் அமைப்பதும் வழக்கம். அந்த சேதம் மடைந்த சிலைகளை கடல், நதிகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் போடுவார்கள்.

அந்த வகையில் கடலில் போடப்பட்ட சேதமடைந்த நந்தி சிலை கடந்த 2 நாட்களாக இருந்த காற்றலுத்த தாழ்வுநிலை காரணமாக ஏற்பட்ட அலையின் சீற்றத்தால் திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று வெளியே தெரிந்தது. இதை பக்தர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து சென்றனர்.


Next Story