திம்பம் மலைப்பாதையில் தலைகீழாக கவிழ்ந்த கார்
திம்பம் மலைப்பாதையில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.
ஈரோடு
தாளவாடி
கோவையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தன்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஒரு கோவிலிக்கு காரில் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு திரும்பினார். திம்பம் மலைப்பாதையின் 24-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் காயம் அடைந்தனர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள், வேனில் இருந்து 6 பேரையும் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அனைவரையும் ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story