கோபியில் காதலர் தினத்தன்று ஆணாக மாறிய பெண்ணுக்கும்-பெண்ணுக்கும் திருமணம்


கோபியில் காதலர் தினத்தன்று ஆணாக மாறிய பெண்ணுக்கும்-பெண்ணுக்கும் திருமணம்
x
தினத்தந்தி 15 Feb 2023 1:00 AM IST (Updated: 15 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தன்று

ஈரோடு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருணாதேவி (24). இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். இதனால் தன்னுடைய பெயரை அருண்பாஷ் என மாற்றிக்கொண்டார். காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருணாதேவி (வயது 24). பி.காம். பட்டதாரி. இவர் காஞ்சீபுரத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு சென்றபோது அருண்பாசுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 2 பேரும் 6 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதல் 2 பேரின் வீட்டுக்கும் தெரியவந்தது. ஆனால் இவர்களுடைய காதலை 2 பேரின் பெற்றோர்களும் ஏற்க மறுத்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 மாதங்களாக பல்வேறு இடங்களிலும் சுற்றி வந்தனர்.

இந்த நிலையில் 2 பேரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நண்பர் ஒருவர் மூலமாக ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் காதலர் தினமான நேற்று பெரியார் உருவப்படம் முன்பு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் வக்கீல் சென்னியப்பன் ஆகியோரது முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.


Next Story