திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஓணவில் சமர்ப்பிக்கும் விழா


திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஓணவில் சமர்ப்பிக்கும் விழா
x

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஓணவில் சமர்ப்பிக்கும் விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஓணம் பண்டிகை விழாவையொட்டி ஓணவில் சமர்ப்பிப்பது வழக்கம். இது மன்னராட்சி காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஓணவில் சமர்ப்பிக்கும் விழா நடந்தது. இதையொட்டி மாலையில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கிருஷ்ணன் உருவம் செதுக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்ட ஓண வில்களை பட்டுத்துணியால் மூடி தென்மேற்கு மூலையில் வைத்தனர். பின்னர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கிருஷ்ணருக்கு ஸ்ரீபலி பூஜை நடைபெற்ற போது அந்த வில்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஓணவில்களை தயாரித்த தச்சர், சாமி முன்பு அவைகளை சமர்பித்தார். தொடர்ந்து ஸ்ரீ பலி விக்கிரகங்களுடன் மேள தாளம் முழங்க ஓணவில்களுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

பின்னர் ஓணவில்கள் கிருஷ்ண சாமி சன்னதியிலும், ஆதிகேசவ ெபருமாள் சன்னதியிலும் வைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. மேலும், கோவிலில் புதியதாக அலங்கார தீபவிளக்கு ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகனகுமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story