"ஒருவர் தொண்டர்களை தாக்குகிறார்"... "மற்றொருவர் கல்லை எடுத்து அடிக்கிறார்" - ஜெயக்குமார் தாக்கு
முதல் அமைச்சரின் கட்டுப்பாட்டில் அவரது அமைச்சர்கள் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியதாவது, என்னை பொறுத்தவரை முதல் அமைச்சரின் கட்டுப்பாட்டில் கட்சியும், அவரது அமைச்சர்களும் இல்லை என்று தோன்றுகிறது.
ஏற்கெனவே திருச்சியில் ஒரு அமைச்சர் தனது சொந்த கட்சிக்காரரையே அடித்தார். கீழே இறங்கு எனக்கூறி அடித்தார். ஆனால் அவரை மேலே உட்கார வைத்தது தொண்டர்கள் தான் என்பதையே மறந்து செயல்படுகிறார். தொண்டர்களை மதிக்காத எந்த கட்சியும் உருப்படாது.
மற்றொரு அமைச்சரோ கல்லை தூக்கி எரிகிறார். இவர்களுக்கு சைக்காலஜிக்கல் ட்ரீட்மென்ட் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story