ஒரு கட்டு ரோஜாப்பூ ரூ.450-க்கு விற்பனை


ஒரு கட்டு ரோஜாப்பூ ரூ.450-க்கு விற்பனை
x

ஒரு கட்டு ரோஜாப்பூ ரூ.450-க்கு விற்பனை

திருப்பூர்

திருப்பூர்

காதலர் தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூர் மார்க்கெட்டில் ஒரு கட்டு ரோஜாப்பூ ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காதலர் தினம்

காதலை சொல்வதற்கு பல வழிகள் இருந்தாலும், ரோஜா மலர்கள் காதல் பரிமாற்றத்தில் முக்கியமான இடத்தை பிடித்து வருகிறது. இதனால் காதலர் தினம் வரும் நாட்களில் ரோஜா பூக்களின் விலை சர்ரென்று ஏறி விடுகிறது. அந்த வகையில் இன்று காதலர் தினம் கொண்டாடும் நிலையில் நேற்று திருப்பூர் பூ மார்க்கெட்டில் ரோஜாப்பூக்களின் விலை அதிகமாக இருந்தது. ஓசூரில் இருந்து பல வகையான ரோஜாப்பூக்கள் திருப்பூர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சிகப்பு ரோஜா மற்றும் தாஜ்மகால் எனப்படும் ரோஜாக்கள் அதிக அளவில் வந்துள்ளன.

ஒரு கட்டு ரூ.450

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு ரோஜாப்பூவின் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு சுமார் 2ஆயிரம் கட்டு ரோஜாக்கள் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது சுமார் ஆயிரம் கட்டு ரோஜாப்பூக்கள் மார்க்கெட்டிற்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு சிகப்பு ரோஜாப்பூ நேற்று ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. தாஜ்மகால் ரக பூ ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவே சாதாரண நாட்களில் ஒரு கட்டு ரோஜாப்பூ ரூ.100 முதல் ரூ.200 வரை இருக்கும். காதலர் தினம் முகூர்த்த நாளில் வராமல் சாதாரண நாளில் வருவதால் விற்பனை குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story