விஷம் குடித்து ஒருவர் தற்கொலை


விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
x

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 42). இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story