ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி


ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
x

சேலம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.

சேலம்

சேலம் அருகே டேனீஸ்பேட்டை- லோகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பாதையில் 55 வயதுடைய ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story