திண்டிவனத்தில்ரெயிலில் அடிப்பட்டு ஒருவர் சாவு


திண்டிவனத்தில்ரெயிலில் அடிப்பட்டு ஒருவர் சாவு
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் ரெயிலில் அடிப்பட்டு ஒருவர் உயிரிழந்தாா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒற்றை கண் பாலத்தின் தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற பயணிகள் ரெயில் அவர் மீது மோதியதில் காயமடைந்தார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிய போது, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து திண்டிவனம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story