செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவில் தை திருவிழா
செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவில் தை திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது.
தூத்துக்குடி
உடன்குடி:
செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தை பூஜை திருவிழா நாளை(வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது. நாளைமறுநாள் காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை முழு நேர சிறப்பு வழிபாடு, இரவு 7 மணிக்கு சக்தி வழிபாடு என்ற தலைப்பில் மோகனசுந்தரம் சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு திரைப்பட இன்னிசை கச்சேரி நடக்கிறது. வருகிற 21-ந் தேதி காலை முதல் இரவு 10 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது. வருகிற 22-ந் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் தை பூஜை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் ஜெயந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story