காசோலை மோசடி வழக்கில் ஒருவருக்கு சிறை


காசோலை மோசடி வழக்கில் ஒருவருக்கு சிறை
x

காசோலை மோசடி வழக்கில் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி சர்க்கார்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 26). இவர் ஹார்டுவேர் தொழில் செய்து வருகிறார். இவரிடம், திருச்சி கண்டோன்மெண்ட் ரெனால்ட்ஸ்ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குகன்(59), கடந்த 2019-ம் ஆண்டில் குண்டூரில் உள்ள தனது நில பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் 2020-ம் ஆண்டு வட்டியுடன் சேர்த்து ரூ.18 லட்சத்துக்கு காசோலை கொடுத்ததாகவும், ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியதாகவும் கூறி விக்னேஷ், ஸ்ரீரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குகன் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு சத்யகுமார் விசாரித்து, குகனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், காசோலைக்கான தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story