அரசு பஸ் மோதி ஒருவர் பலி
செங்கம் அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை
செங்கம்
செங்கத்தை அடுத்த அரசாங்கன்னி பஸ் நிறுத்தம் அருகே 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
உயிரிழந்த நபரின் மார்பு பகுதியில் நந்தகோபால் எனவும், கைகளில் ராமு, பார்த்திபன் எனவும் பச்சை குத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேல்செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story