பஸ் மோதி ஒருவர் பலி
நாங்குநேரி அருகே பஸ் மோதி ஒருவர் பலியானார்.
திருநெல்வேலி
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே பாணாங்குளம் நாற்கரசாலையில் நேற்று காலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அந்த நபர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மூன்றடைப்பு போலீசார் விரைந்து சென்று, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story