டிராக்டர் மோதி ஒருவர் பலி


டிராக்டர் மோதி ஒருவர் பலி
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டர் மோதி ஒருவர் பலி

விருதுநகர்

ராஜபாளையம்

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கோவிந்தராஜ் (வயது 46). இவர் இருசக்கர வாகனத்தில் ராஜபாளையம் அருகே புத்தூர் பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை உடனடியாக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி மதியழகி தளவாய்புரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தேவிபட்டினத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் தங்கம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story