விவசாயி கொலையில் ஒருவர் கோர்ட்டில் சரண்


விவசாயி கொலையில் ஒருவர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் விவசாயி கொலையில் ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

தென்காசி

தென்காசி எல்.ஆர்.எஸ்.சாமி நாயுடுபாளையத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் செந்தில் முருகன் (வயது 41). விவசாயியான இவர் கடந்த 25-ந் தேதி மெடிக்கலில் மருந்து வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வீட்டின் அருகே வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்தில்முருகனை குத்திக் கொன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தன்னை போலீசார் தேடுவதை அறிந்த வெங்கடேஷ் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.


Next Story