மேலும் ஒருவர் கைது


மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 4:58 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் அனுப்புவதாக விவசாயியிடம் ரூ.9 ஆயிரத்து 500 மோசடி செய்த மேலும் ஒருவரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

முகநூல் விளம்பரம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா சவளகாரன் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு உதிரிபாகங்கள் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனது முகநூலை பார்த்த போது மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுக்கான விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரத்தை பார்த்த சக்திவேல், அதில் இருந்த எண்ணை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது மர்ம நபர் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுக்கான புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். அந்த உதிரிபாகங்களை சக்திவேல் கேட்டதற்கு அந்த நபர் உதிரி பாகங்களை அனுப்பி வைக்க ரூ.9 ஆயிரத்து 500-ஐ செலுத்த வேண்டும்.

முதலில் ஆன்லைன் மூலம் ரூ.1 அனுப்பி வைப்பதாவும், பின்னர் அதே நம்பரில் ரூ.9 ஆயிரத்து 500-ஐ செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி அந்த மர்ம நபர் ஆன்லைன் மூலம் ரூ.1 அனுப்பி வைத்த உடன் சக்திவேல் அந்த பணத்தை அனுப்பி உள்ளார்.

பணத்திற்கான ரசீது

பணத்தை பெற்று கொண்ட அந்த நபர் சக்திவேலிடம் கூரியர் மூலம் மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை அனுப்பி வைப்பதாகவும், அதற்கான ரசீதை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி எந்த ரசீதும் வரவில்லை. உடனே சிறிது நேரம் கழித்து அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சக்திவேல் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சக்திவேலிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 500 மோசடி செய்தது திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த தேன் செல்வம்(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரியமங்கலம் சென்று தேன்செல்வத்தை கைது செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த வழக்கில் அரியமங்கலம் ராஜப்பா நகரை சேர்ந்த தாஸ் என்ற ஜகாங்கீர்(42) என்பவருக்கு தொடர்படையதும், இவர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் குடும்பத்தினருடன் வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வேளாங்கண்ணி சென்று ஜகாங்கீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story