முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேலும் ஒரு ஒப்பந்தம்: இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தொழிற்சாலையை அமைக்கிறது ஒம்ரான் நிறுவனம்!
ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர். தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை,
டோக்கியோவில், ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக புதிய தொழிற்சாலையை நிறுவிடும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே, ரூ. 128 கோடி முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் ரூ.128 கோடியில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி ஆலையை நிறுவுகிறது ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம். ஒம்ரான் நிறுவனம், தொழிற்சாலை ஆட்டோமேஷன், ஹெல்த்கேர், மின்னணு பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கிறது ஒம்ரான் நிறுவனம்.
Related Tags :
Next Story