பாணாவரம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்
பாணாவரம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே கூத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 21).
இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சரத்குமார் வீட்டின் அருகே சுடுகாட்டுப் பகுதியில் கை, கால்கள் துண்டு, துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். ச
ரத்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய கீழ்வீராணம் அடுத்த மோட்டூரை சேர்ந்த எம்.ஜி.ராமச்சந்திரன் கடந்த மாதம் ஆரணி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இதே வழக்கு சம்பந்தமாக அரக்கோணம் ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (23) என்பவரும் ஆரணி கோர்ட்டில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் சரண் அடைந்தார்
அவரை வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.