பண மோசடி செய்த மேலும் ஒருவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் பூசனூர் பகுதியை சேர்ந்த அருளப்பன் மகன் எபனேசர் (வயது 45). இவரிடம் கடந்த 2021-ம் ஆண்டு விளாத்திகுளம் வி.வேடப்பட்டி பகுதியை சேர்ந்த தாழைச்சாமி மகன் தாளமுத்து (31) என்பவர் வெளிநாட்டு வேலைக்காக ரூ.40 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் எபனேசர், வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கடந்த மாதம் 18-ந்தேதி எபனேசரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய எட்டயபுரம் சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்த சக்கையா (54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story