இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

.திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 47). இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு சென்று அங்கு ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் அவருக்கு இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அவர் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் முடுக்குப்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மன், உலகநாதபுரத்தை சேர்ந்த சரவணன், பிரசன்னா ஆகியோர் பீர்பாட்டிலால் சின்னதுரையை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மனை (65) கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய உலகநாதபுரத்தை சேர்ந்த பிரசன்னா, சரவணன் ஆகியோரை தேடி வந்தனர். இந்தநிலையில் பிரசன்னாவை (24) நேற்று கைது செய்தனர். தொடர்ந்து சரவணனை தேடி வருகிறார்கள்.


Next Story