விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

ஆலங்காயம் அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆலங்காயத்தை அடுத்த படகுப்பம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 66) விவசாயி. இவர் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி 10 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார். இது சம்மந்தமாக ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நிலத்தகராறு காரணமாக அவரது அண்ணன் சிவகுமார், இவரது மகன் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து உதயகுமாரை அடித்து கொலை செய்து டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் சிக்கி இறந்ததாக நாடகமாடியது தெரிய வந்தது.

அதன்பேரில் கொலை வழக்குப்பதிவுசெய்து மணிகண்டனை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிவகுமாரை (72) தேடி வந்த நிலையில் நேற்று ஆலங்காயம் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story