மாணவி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது


மாணவி பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 12 April 2023 12:45 AM IST (Updated: 12 April 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

கொண்டலாம்பட்டி;-

ஏற்காடு பகுதியில் உள்ள ஒரு மலை கிராமத்தில் 13 வயதுடைய 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மளிகை கடைக்கு சென்றார். அப்போது அந்த மாணவியை, மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த சக்தி (வயது 36), சித்தையன் (26) ஆகிய இருவரும் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மல்லூர் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் விசாரித்தனர். இதையடுத்து சக்தி, சித்தையன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் சதீசை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த தேடப்பட்டு வந்த சித்தையன், ஏற்காடு கரடியூர் பஸ் நிறுத்தத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து விசாரித்தனர்.


Next Story