திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

திருச்சியை சேர்ந்த ரவுடி இளவரசன் (வயது 31). இவர் கடந்த 12-ந் தேதி புதுக்கோட்டையில் ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் கையெழுத்திட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஒரு கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.

இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த காளிதாஸ் (32) என்பவரை கணேஷ்நகர் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் சரண் அடைந்துள்ளார். மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story