ஆத்தூரில்மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலிடிரைவர் கைது
ஆத்தூர்
சேலம் அஸ்தம்பட்டி சுப்பராயலு லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சம்மந்தம். இவருடைய மகன் கணேசன் (வயது 36). இவரும், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் முத்தா கவுண்டனூர் குடி தெருவை சேர்ந்த மூர்த்தி (28) என்பவரும் ஆத்தூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் புறவழிச்சாலையில் சென்றபோது செங்கல்பட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் படுகாயமடைந்த கணேசன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் செங்கல்பட்டு மதுராந்தகம் தாலுகா ஊனமலை கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.