கல்லூரி மாணவரை பாட்டிலால் தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
கல்லூரி மாணவரை பாட்டிலால் தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மகன் முகமது நூர் பையாஸ் (வயது 21). இவர் ஆலங்குடி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருகிறார். நேற்று முன்தினம் முகமது நூர் பையாஸ் தனது மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த விமல்ராஜ் (24), வெள்ளைசாமி (22) உள்பட 3 பேர் முகமது நூர் பையாசிடம் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த கண்ணாடி பாட்டிலால் அவரது தலையில் தாக்கினர். இதில் முஹம்மது நூர் பையாஸ் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய விமல்ராஜை போலீசார் நேற்று கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.