கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது


கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த ஆத்துபாளையம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோரஞ்சன் (வயது 25) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கையில் இருந்த பையில் போலீசார் சோதனை நடத்திய போது, அதில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் மனோரஞ்சனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story