பஸ் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி


பஸ் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி
x

பஸ் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.

திருப்பத்தூர்

பஸ் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.

சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் வழியாக ஆம்பூருக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. நள்ளிரவு 12.30 மணியளவில் பஸ் வேலூர் புதிய பஸ்நிலையத்துக்கு வந்தது. வேலூரில் பயணிகளை இறக்கி விட்டு, ஆம்பூர் செல்லும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறிதுநேரத்தில் அங்கிருந்து பஸ் மெதுவாக புறப்பட்டது. அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வேகமாக பஸ்சை நோக்கி ஓடிவந்தார். எதிர்பாராத விதமாக பஸ்சின் அருகே வந்தபோது அவர் கால் தவறி கீழே விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.

தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story