மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு
மின்சாரம் தாக்கி கொத்தனார் உயிரிழந்தாா்.
விழுப்புரம்
விழுப்புரம் காகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தட்சிணாமூர்த்தி (வயது 31). இவர் டைல்ஸ் போடும் கொத்தனார் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஒரு வீட்டில் வேலையை முடித்துவிட்டு குண்டுபல்பு வயருடன் வேறு இடத்திற்கு மாற்றி எடுத்து வைக்க வயரை தொட்டபோது திடீரென மின்சாரம் தாக்கியது. உடனே அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story