வாகனம் மோதி ஒருவர் சாவு


வாகனம் மோதி ஒருவர் சாவு
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் அலிகார் சாலையை சேர்ந்தவர் சதக்கத்துல்லா (வயது 55). டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு உறவினர்கள் பாபா பகுருதின், இன்சமாம் உல்ஹக் ஆகியோருடன் சேர்ந்து குயவன் குண்டு அருகே உள்ள இருசக்கர வாகன மெக்கானிக் கடைக்கு சென்றார். அங்கு மோட்டார் சைக்கிள் பழுது பார்த்து விட்டு சதக்கத்துல்லா வீடு திரும்பினார். அப்போது கீழக்கோட்டை வளைவு அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றார்.


Related Tags :
Next Story