விபத்தில் ஒருவர் பலி


விபத்தில் ஒருவர் பலி
x

நெல்லை அருகே விபத்தில் ஒருவர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள படப்பக்குறிச்சி படேல் கீழத்தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 54). இவர் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வைத்து கட்டுமான பணிகள் செய்து வந்தார். இவர் நேற்று காலையில் பொட்டல் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் குளித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மதுரை- கன்னியாகுமரி நாற்கர சாலையில் வந்து கொண்டு இருந்தார். பொட்டல் சந்திப்பு பகுதியை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மினிலாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story