விபத்தில் ஒருவர் பலி


விபத்தில் ஒருவர் பலி
x

மன்னார்குடியை சேர்ந்தவர் விபத்தில் உயிரிழந்தார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா (54). சம்பவத்தன்று இவரும், இவருடைய மகன் திலக் பிரசாத் (14) ஆகியோர் தஞ்சை அருகே உள்ள வாண்டையார் இருப்புக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது வாண்டையார் இருப்பு அருகே உள்ள ஒரு திருப்பத்தில் திரும்ப முயன்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், சின்னப்பா ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சின்னப்பா மகன் திலக் பிரசாத் படுகாயம்அடைந்தார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சின்னப்பா உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த திலக் பிரசாத்தை சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story