மொபட் மீது லாரி மோதி ஒருவர் படுகாயம்
மொபட் மீது லாரி மோதி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கரூர்
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் சந்தை பேட்டையை சேர்ந்தவர் முருகையன் (வயது 48). இவர் சம்பவத்தன்று தனது ெமாபட்டில் ஆர்.புதுக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த சண்முகம் என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக முருகையன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் ெமாபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகையன் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து முருகையாவின் மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story