வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
அவினாசி
அவினாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது:-
வழிப்பறி
பெருமாநல்லூர் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 33) என்பவர் மோட்டார் சைக்கிளில் கடந்த 3.10.2018 அன்று தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கணக்கம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அங்கு நின்றிருந்த 4 மர்ம ஆசாமிகள் இவரிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து மோட்டார்சைக்கிளை நிறுத்தி உள்ளனர். உடனே 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து ஆனந்தராஜை பிடித்துக்கொண்டனர். மற்ற இருவர் அவரிடம் இருந்த ½ பவுன் மோதிரம், ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.1000-த்தையும் பறித்துச் சென்றனர்.
ஒரு ஆண்டு சிறை
இது குறித்து ஆனந்தராஜ் பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செயது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பெருமாநல்லூர் பாண்டியன் நகரை சேர்ந்த சைபுல்லா மகன் காதர் மீரான் (24), தங்கராஜ் மகன் கோபிநாத் (23), இஸ்மாயில் மகன் ஆசிக் (23), பூலுவபட்டியை சேர்ந்த சேகர் மகன் ராஜா (23) ஆகியோரை கைது செய்து அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவினாசி நீதிமன்ற நடுவர் நீதிபதி கே.எஸ்.சபீனா வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கும் தலா ஒரு வருட சிறை தண்டனையும், ரூ.1000-ம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
============
3 காலம்
வழிப்பறியில் ஈடுபட்டு சிறை தண்டனை அடைந்த 4 பேரை படத்தில் காணலாம்.