ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு


ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையபாளையம் கிராமத்தில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், தொழில்துறை செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல்பாடுகளையும் தடையின்மை சான்று பெறாமல் இயக்கத்தில் இருக்கும் துறப்பன கிணறுகளின் நிலைப்பாடு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நிறுவனத்தில் பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கும் இயற்கை எரிவாயுவை கெயில் நிறுவனத்தினர் பயன்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் அமையப் பெற்றுள்ள எரிவாயு குழாய்களின் திட்டம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார். அப்போது மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒலி, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் மற்றும் ஓ.என்.ஜி.சி. அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story