வேலைவாய்ப்புக்கு இணையவழி தேர்வு
முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்புக்கு இணையவழி தேர்வு நடந்தது.
முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஹெச்.சி.எல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கடலாடி அரசு கலைக்கல்லூரி முதல்வர் பாண்டீஸ்வரி தலைமை தாங்கினார். மேலாளர் செந்தில்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ உதவி பேராசிரியர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். இதில் வணிகவியல், கணினி அறிவியல், கணினி துறையில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ-மாணவிகள் கடலாடி அரசு கல்லூரியில் 43 பேரும் முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் 33 பேர் என மொத்தம் 76 பேர் இணைய வழி தேர்வில் பங்கு பெற்றனர். இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி அரசு கல்லூரி பேராசிரியர்கள் தகவல் தொடர்பு அலுவலர்கள், உதவி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாட்டினை விமலா, சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.