ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம்: கவர்னர் பதவியே தேவை இல்லை -சீமான் ஆவேசம்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம்: கவர்னர் பதவியே தேவை இல்லை -சீமான் ஆவேசம்.
சேலம்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றி அதை ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. மக்கள் நலனில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலை நீடிப்பதால் தான் கவர்னரே நமக்கு தேவையில்லை. இந்த கவர்னர் வேண்டாம் என்று சொல்லவில்லை. கவர்னர் பதவியே தேவை இல்லை என்பதையே வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு சீமான் கூறினார்.
Related Tags :
Next Story