ஆன்லைன் லாட்டரி விற்பனை; 3 பேர் கைது


ஆன்லைன் லாட்டரி விற்பனை; 3 பேர் கைது
x

ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முகமது இப்ராகிம் (வயது 32), செல்வராசு (40), செந்தில்குமார் (41) ஆகிய 3 பேரை பிடித்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.31 ஆயிரத்து 325 மற்றும் 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதில் கைதான இப்ராகிம் செருப்பு கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Next Story