ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது


ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
x

முத்துப்பேட்டையில் ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பவர் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தபோது சிக்கினர். பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ெசல்வராஜை கைது செய்தனர்.


Related Tags :
Next Story