ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும்


ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும்
x

ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரணி போலீசில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாஸ்கர், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் ரமேஷ், துணைச் செயலாளர் பி.சிகாமணி, உள்பட நிர்வாகிகள் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதங்கள் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

சாலையோரம், பெட்ரோல் பங்குகளில் பார்க்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண் மட்டும் குறித்து வைத்துக்கொண்டு என்ன குற்றம் என்று கூறாமல் ஜெனரல் அபன்ஸ் என்று அபராதம் விதிக்கப்படுகிறது.

ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலங்களின் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்படுகிறது,

சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைக்கவசம் அணியவில்லை போன்ற காரணங்களுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்களாலி் சம்பந்தமான வாகன உரிமையாளர்கள் வாகனத்துக்கான காலாண்டு வரி, தகுதி சான்று, பர்மிட் பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

எனவே இது போன்ற ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.

வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை உள்ளிட்டவற்றை சரிபார்த்து குற்றம் இருந்தால், அபராதம் விதித்து, டிரைவர்கள் கையொப்பத்துடன் என்ன குற்றம், டிரைவர் பெயர், ஓட்டுனர் உரிமம் எண்ணையும் ரசீதையும் குறிப்பிட வேண்டும்.

எனவே இம்மாதிரியான ஆன்லைன் அபராத முறையை மறுபரிசீலனை செய்து நலிந்து வரும் லாரி தொழிலை காத்து வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவையின் நிறுவனர் ஆரணி சி.குணசேகரனும் டிரைவர்களுடன் சென்று கோரிக்கை மனு வழங்கினார்.


Next Story